இந்தியன் -2 துவங்கும்?

kamal indianவிஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கி வரும் படம் ‘நண்பன்’. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் கொஞ்சம்  மட்டுமே பாக்கி உள்ளது.

இயக்குனர் ஷங்கர் ஒரு படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து முதல் பிரதியை பார்த்தவுடன் தான் தனது அடுத்த பட வேலைகள் பற்றி சிந்திக்க துவங்குவார்.

இப்போது நாட்டில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்த்து, ஷங்கரின் நண்பர்கள் அவரிடம் ‘இந்தியன் -2′ எடுக்க சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள்.

இயக்குனர் ஷங்கர் ‘நண்பன்’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து முதல் பிரதி பார்த்தவுடன் இது பற்றி சிந்திக்க இருக்கிறாராம்.

ஏற்கனவே ‘இந்தியன்’ படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் கமல். கமல் அளித்த பேட்டி ஒன்றில் “நாயகன் -2 படத்தில் நடிப்பீர்களா? ” என்ற கேள்விக்கு  ” நாயகன்-2 வருமா என்று தெரியாது.. ஆனால் இந்தியன் – 2 வர வாய்ப்பிருக்கிறது ” என்று கூறி இருந்தார்.

ஷங்கரின் சிந்தனையும், கமலின் அளித்த பழைய பேட்டியையும் பார்க்கும் போது இந்தியன் -2 துவங்கும் என்றே கோலிவுட்டில் நம்புகிறார்கள் .

About Author: admin
Post Your Comment